ரபேல் ஒப்பந்தம்: பதவியில் இல்லாத ஹாலண்டே கருத்தால் இந்தியா உடனான உறவில் பாதிப்பு ஏற்படும் – பிரான்ஸ்

அரசின் பதவியில் இல்லாத ஒருவரின் (ஹாலண்டே) கருத்தால் எந்த பயனும் இல்லை, இதனால் இந்தியா – பிரான்ஸ் உறவு பாதிக்கப்படும் என பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஜூன் பாப்டிஸ்ட் கூறியுள்ளார். ரபேல் போர் விமானம் குறித்த சர்ச்சைக்கு பதிவியில் இல்லாத ஒப்பந்தம் குறித்து சமீபத்தில் பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறிய கருத்திற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

rafel

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல்போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயில் ஹாலண்டே, ’ உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரைத்தது, எங்களுக்கு வேறு எந்த நிறுவனம் குறித்தும் சிபாரிசு செய்யப்படவில்லை’ என்று சமீபத்தில் பகீர் கருத்து கூறினார். ஹாலண்டேயின் கருத்தை மத்திய அரசும், பிரான்ஸ் அரசும் மறுத்துள்ளது. டசால்ட் நிறுவனமும் ரிலையன்ஸ்சும் செய்துகொண்ட ஒப்பந்தம் என்றும் இதில் தங்களுடைய தலையீடு எதுவும் இல்லை என்று இரு நாடுகளும் தெரிவித்துள்ளது.

எனினும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின்மூலம் மத்திய அரசு ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து ரபேல் விமான ஒப்பந்தம் குறித்த சர்ச்சைப்பேச்சு இந்தியாவில் அதிகரித்த் வண்ணம் உள்ளது. இது குறித்து பிரான்ஸ் வெளியியுறவுத்துறை இணையமைச்சர் ஜூன் பாப்டிஸ்ட் லெமோயன் பாரீஸில் செய்தியாளர்களிடம் கூறியதாவது ” இன்னொரு நாடு சம்பந்தப்பட்டுள்ள ஒரு விவகாரம் குறித்து ஹாலண்டே இப்படி கருத்து கூறியிருப்பதால் பிரான்ஸுக்கும் இந்தியாவுக்குமான உறவு பாதிக்கப்படும். தற்போது அரசின் ஒரு அங்கமாக இல்லாத ஒருவர், இரு நாட்டு அரசுகள் போட்ட ஒப்பந்தம் குறித்து கருத்து கூறுவது ஏற்புடையதல்ல. உண்மையில் இது பாராட்டுக்குரிய வி‌ஷயம் அல்ல “ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி