ரஃபேல் ஊழல் புத்தகத்துக்கு இலவச விளம்பரம் கொடுத்த தேர்தல் ஆணையம்: புத்தக விற்பனை அமோகம்…

சென்னை:

ஃபேல் ஊழல் தொடர்பான புத்தகத்தை முதலில் வெளியிட தடை விதித்தும், பின்னர் எழுந்த எதிர்ப்பின் காரணமாக,  தடை விதிக்கவில்லை என தேர்தல் ஆணையம் பல்டி அடித்த நிலையில், தற்போது ரஃபேல் ஊழல் தொடர்பான புத்தகம் அமோகமாக விற்பனையாகி வருகிறது.

நேற்று மாலை வெளியாக இருந்த  “நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” என்ற புத்தகத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தாக கூறி காவல்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இது பெரும் பரபரப்பையும் கடுமையான கண்டனங்களையும் எதிர்கொண்டது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாகு, “இந்த புத்தகங்கள் வட்டார தேர்தல் பறக்கும் படை அதிகாரியின் உத்தரவால்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை உடனடியாக திருப்பி ஒப்படைக்க கூறப்பட்டதாக தெரிவித்தார்.

அதையடுத்து திட்டமிட்டப்படி நேற்று மாலை புத்த வெளியீட்டு விழா நடைபெற்றது.  இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அதைத்தொடர்ந்து வெளியீட்டு மேடையிலேயே சுமார் 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், 10 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தின் விலை ரூ.15 ஆகும்.

இதுதவிர புத்தகத்தின் பிடிஎஃப் பிரதிகள் 1 லட்சம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. பிடிஎஃப் பிரதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக சாதாரணமாக நடைபெற இருந்த ஒரு புத்தக வெளீயீட்டை தடுத்து நிறுத்தி தேர்தல் ஆணையம் நடத்திய கூத்து காரணமாக, இன்று புத்தக விற்பைன படு ஜோராக நடை பெற்று வருகிறது… இலவசமாக புத்தகத்துக்கு விளம்பரம் கொடுத்த தேர்தல் ஆணையத்தை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி  வருகின்றனர்.

இந்த நிலையில்  ரஃபேல் புத்தக வெளியீட்டுக்கு பிரச்சினை ஏற்படுத்தியதால், மேலும் மோடி அரசுக்கு எதிரான மேலும் ஐந்து புத்தகங்களை வெளியிடுவதாக அறிவித்து உள்ளது பாரதிய புத்தகாலயம்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed