ரஃபேல் விவகாரத்தில் முழுமையான விசாரணை வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:

ரபேஃல் போர் விமான ஒப்பந்த்தம் விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ரபேஃல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரபேஃல் விமான ஒப்பந்த விவரத்தை வெளியிட வேண்டும் என பாஜக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது.  இது குறித்து உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் இடம் பெற்றது குறித்து பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் சந்தேகங்களைக் கிளப்பி உள்ளன. இந்தியாவை சேர்ந்த அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்தியாதான் ரபேல் போர் விமான ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த  பிரான்ஸ் அரசின் முன்னாள் ஜனாதிபதி ஃப்ரான்கோயிஸ் ஹோலந்தி கூறுகையில், “ அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்திடம் போர் விமான ஒப்பந்தம் போட இந்தியா கோரியிருந்தது. அதன் பிறகே ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டது என தெரிவித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரபேஃல் ஒப்பந்தம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  வெளிப்படையான, ஊழல் இல்லாத அரசாங்கத்தை தருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். , ஆனால் முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்டின் பேட்டியில் ரபேல் ஒப்பந்தம் சந்தேகிக்கப்படுவதாக காட்டுகிறது.

இதற்கு பிரதமர் பொறுப்பேற்று, இது குறித்த உண்மையை கண்டுபிடிக்க முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.