ரபேல்  ஊழல் வழக்கில் நடைமுறைகள் ஏற்புடையதல்ல –  உச்சநீதிமன்ற முன்னாள்நீ திபதி கருத்து 

டெல்லி: ரபேல் ஊழல் விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட உறைய பிரிக்கும் விஷயத்தை நான் கையிலெடுத்திருக்க மாட்டேன் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செலமேஸ்வரர் கூறியுள்ளார்.

 

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செலமேஸ்வரர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் ரபேல் ஊழல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த நீதிபதி செலமேஸ்வரர், ‘’ரபேல் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து நான் அதிகம் பேச இயலாது.

எனினும், ராபேல் மாதிரியான வழக்கில் சீல் செய்யப்பட்ட உறை விஷயத்தை கையில் எடுத்திருக்க மாட்டேன். அது நீதித்துறையில் சரியான விஷயம் அல்ல. மூடப்பட்ட உறை அல்லது கேமரா விசாரணை நமது இந்திய நீதித்துறையில் கிடையாது. மிகவும் அரிதான வழக்குகளில் மட்டுமே இம்மாதிரியன நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படும்’’ என கூறினார்.

ரபேல் ஊழல் வழக்கு பரபரபப்டைந்திருக்கும்  இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியின் இக்கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.