இதையடுத்து,  முதல்,  ரஃபேல் போர் விமானம் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்படும் என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்திருந்த நிலையில், 2019ம் ஆண்டு அக்டோபர் 8ந்தேதியே,  முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் பிரான்ஸ் நாட்டுக்கு  சென்று பெற்றுக்கொண்டார், இதையடுத்து,  கடந்த ஆண்டு செப்டம்பர் 10ந்தேதி ரஃபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது.
அதைத்தொடர்ந்து மேலும்  5 ரஃபேல் போர் விமானங்கள் 2020ம் ஆண்டு  ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்தது.  ஜூலை மாதம் 29ம் தேதி இந்தியா வந்த இந்த விமானங்கள், அம்பாலா விமானப்படை தளத்தல் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அந்த விமானங்கள்,  இந்திய எல்லையை பாதுகாக்கும் பணியில் லடாக் பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில்,  ரஃபேல் போர் விமானங்களை முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கும் விழா வருகிற 10ம் தேதி அரியானா மாநிலம் அப்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, ரஃபேல் போர் விமானங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  இந்த நிகழ்ச்சியில்,  பிரான்ஸ் ராணுவத் துறை அமைச்சரும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.