மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரஃபேல் விசாரணை தொடங்கும்! சிதம்பரம்

பெங்களூரு:

த்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறை கேடு குறித்த விசாரணை தொடங்கும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ரஃபேர் போர் விமானம் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த ஒப்பந்தம் காரணமாக அனில் அம்பானியின் நிறுவனம் ஆதாயம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காங்கிரஸ் தலைவர் பிரதமர் மோடிக்கு எதிராக ஆவேசமாக பேசி வருகிறார்.

இதற்கிடையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதி மன்றம், ரஃபேல் விவகாரத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், பெங்களூர் சென்றுள்ள முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிதம்பரம், ‘எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து விமானம் பேர ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு இந்த அரசு உத்தரவிடாவிட்டால் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் நாங்கள் அந்த காரியத்தை செய்வோம்’ என்று குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த 5 மாநிலங்களிலும், நாங்கள் ரபேல் ஊழலை முன்வைத்தே பிரசாரம் செய்தோம். மக்கள் பாஜகவுக்கு நல்ல பாடம்புகட்டி உள்ளனர்.  வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இது முக்கிய  பிரச்சனையாக எதிரொலிக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி