டெல்லி:

ஃபேல் போர் விமானம் ஒப்பந்ததத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ரஃபேல் குறித்து விமர்சித்த  ராகுல்காந்தி  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதில் மாபெரும் ஊழல் நடத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பாஜக மூத்த தலைவர்களான யஷ்வந்த்சின்கா உள்பட பலர் குற்றம் சாட்டினர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், ரஃபேல் விமானம் வாங்குவதில் முறைகேடு நடைபெறவில்லை என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த நிலையில், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜக சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜகவின் பொதுச்செயலா் பூபேந்தா் யாதவ் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து கூறியவர்,   ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய்களை கூறியதற்காக அவா் உச்சநீதி மன்றத்திடம் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாா். முதல் முறையாக ஒரு தேசியத் தலைவா் உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. ரஃபேல் விவகாரத்தில் மோடிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் ராகுல் பொய்களை கூறியதற்காக அவா் தற்போது இந்த தேசத்திடமும் மன்னிப்பு கோருவதைத் தவிர வேறு வழியில்லை.

எனவே, எங்களது கோரிக்கையெல்லாம் இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் பொய்களைக் கூறிய ராகுல் காந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் தேசத்திடம் வெளிப்படையான முறையில் மன்னிப்பை கோர வேண்டும்.

அதனை வலியுறுத்தும் வகையில்தான் பாஜகவினா் சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் பாஜக சார்பில், ராகுல்காந்தி மன்னிப்பு கோரி போராட்டம் நடைபெறுகிறது.