மெல்போர்ன்: சாம்பியன் பட்டம் வெல்லக்கூடியவர் என்று கருதப்பட்ட ரபேல் நாடல், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

நாடல் தற்போது உலகின் ‘நம்பர் 1’ வீரராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், உலகின் 5ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியமிடம் தோற்றுப்போனார்.

இந்தப் போட்டி மொத்தம் 4 மணிநேரம் 10 நிமிடங்கள் நீடித்தது. இப்போட்டியில் டொமினிக் 7-6, 7-6, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் நாடலை வீழ்த்தினார்.

இத்தோல்வியின் மூலம் 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் நாடலின் சாதனைக் கனவு பொய்த்துப்போனது.

மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு நாடலிடமிருந்து நழுவிவிட்டது.