சென்னை:

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக்கோரி நடிகர் லாரன்ஸ் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதித்து உள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் அப்பகுதியில் இயற்கை வளங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்து மக்கள் போராடி வருகிறார்கள். கடந்த இரு வாரங்களாக நடக்கும் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்துவருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது லாரன்ஸ்..

மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமே கொந்தளித்து வருகிறது. நெடுவாசல் பகுதி மக்கள் தொடர்ந்து 14வது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

திரையுலக பிரமுகர்கள் பலரும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்கள்.  நெடுவாசல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையுலகம் போராடும் என்று நடிகர்  விஷால் நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில், நடிகர்  ராகவா லாரன்ஸ் நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 9 மணி முதல் 6 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதில் இளைஞர்களும் மாணவர்களும் பெருமளவு கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கெனவே சென்னை மெரினாவில், ஜல்லிக்கட்டு தடை நீக்க இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் லாரனஸ் கலந்துகொண்டார்.  அப்பது  அரசுக்கு சார்பாக செயல்படுகிறார் என்றும்,  போராட்டக்காரர்களுக்கு உணவு அளித்து சாப்பாடுபோட்டதாக சொல்லிவருகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.