Random image

“வா தலைவா போருக்கு வா” : ரஜினி அரசியலுக்கு அழைக்கும் லாரன்ஸ் பாடல் வெளியீடு

 

 

டிகா் ரஜினிகாந்த்தை அரசியலில் குதிக்க வலியுறுத்தும்படியாக, நடிகர் “வா தலைவா போருக்கு வா“ என்ற பாடலை உருவாக்கி இன்று வெளியிட இருக்கிறார்.

கடந்த  முறை நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பின் போது போர் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி, பிறகு படபிப்புக்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

தற்போது மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் இடையே அவர் பேசுவதை வைத்து, அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள். இந்த நிலையில் வரும் 31ம் தேதி அரசியல் குறித்த தனது முடிவை அறிவிப்பதாக ரஜினி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஜினியை  அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தும் விதமாக, நடிகா் ராகவா லாரன்ஸ் புதிய பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

“வா தலைவா போருக்கு வா“ தலைவா என்று துவங்கும் இந்த பாடலை இன்று இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்போவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.