சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 3டி படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்…!

முனி”படத்தின் வெற்றியின் மூலம் காமெடி பேய் படம் என்று ஒரு தனி டிராக்கை உருவாகினார் ராகவா லாரன்ஸ் . கோலிவுட்டில் கலக்கிய லாரன்ஸ் தற்பொழுது பாலிவுட்டிலும் கலக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

இந்தி மொழியில் அக்சய் குமாரை கதாநாயகனாக வைத்து காஞ்சனா படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கும்3D திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளது.

இந்தப் படத்தில்ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து , இயக்கவும் உள்ளார்என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப் படுகிறது.