டிஆர்பியை எகிற லாரன்சின், ’காஞ்சனா 2’ பேய் படம்..

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள் ளன. சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


அதனால் மக்கள் அனைவரும் வீட்டி லேயே இருப்பதாலும், ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான படங் களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.
தற்போது அதிகம் மக்களால் பார்க்கப் பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.இந்த வகையில் கடந்த வாரம் ஒளிபரப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களில் அதிகம் பார்க்கப் பட்டவற்றின் தரவரிசை வெளியாகி யுள்ளது.
முதலிடத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 2 படம் பெற்றுள்ளது. பிச்சைக்காரன் இரண்டாவது இடத்தையும் ,மூன்றாவது இடத்தை ராகவா லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா பிடித்துள்ளது.
காஞ்சனா சீரிஸின் அனைத்து பாகங்களும் தற்போது வரை ஒளிபரப்பப்பட்டு விட்டன. அவை பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக TRP-யை அள்ளிக் குவித்து வருகிறது.
அதே போல் கடந்த வாரம் ஹிந்தி தொலைக்காட்சிகளில் வெளியான ‌‌படங்களின் தரவரிசையில் ராகவா லாரன்ஸின் k3 kali ka karishma ( காஞ்சனா 3 ஹிந்தி ) படமும் TRP தர வரிசையில் 3 வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.