சர்ச்சைக்கு பிறகு கமலை சந்தித்த ராகவா லாரன்ஸ்..!

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ் சிறு வயதில் கமல்ஹாசன் போஸ்டரில் சாணி அடித்ததாக தெரிவித்தார். பின்னர் அது மிக பெரிய சர்ச்சையானது .

லாரன்ஸின் இந்த பேச்சால் கடுப்பான கமல் ரசிகர்கள், அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.

இதனை தொடர்ந்து தான் பேசியது திரித்துக் கூறப்பட்டதாக விளக்கமளித்தார் லாரன்ஸ்.

இந்நிலையில் கமலை நேரில் சந்தித்து தான் பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திரு.கமல் ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.. என பதிவிட்டுள்ளார்.