ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 7-வது படமாகும்.
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் வரும் அக்டோபர் 29-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.


ஜிவி பிரகாஷ் இசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பது இதுவே முதல் முறையாகும். படத்தின் இயக்குனர் பற்றிய விவரம் 29-ம் தேதி வெளியாகும்.