கொரோனா ஊரடங்கு காலத்தில் திரைபிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சமூகவலைதளங்களில் இயங்கி வருகிறார்கள்.
சமீபத்தில் ரஜினிகாந்துடன் உழைப்பாளி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் ராகவா லாரன்ஸ்.


தற்போது நடன இயக்குநர் பிரபுதேவாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணிபுரிவதைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளனர் .