3டி தொழில்நுட்பத்தில் ‘காஞ்சனா 4’-ம் பாகத்தில் ஒப்பந்தமானார் லாரன்ஸ்…!

 

ஏப்ரல் 19-ம் தேதி சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘காஞ்சனா 3’. இப்படம், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் 4-ம் பாகத்தை இயக்கி, நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனமே இதனையும் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது.

தற்போது அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ள ‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தும் லாரன்ஸ். இப்படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, ‘காஞ்சனா 4’ பணிகளைத் தொடங்கவுள்ளார்.

‘காஞ்சனா 4’ பாகத்தை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி