அக்‌ஷய் குமார் திகில் படம் ஒடிடி ரிலீஸிருந்து விலகல்.. காரணம் என்ன தெரியுமா?

ராகவா லாரன்ஸ் தமிழில் படத்தை இயக்கி நடித்த படம் முனி: காஞ்சனா. திருநங்கை வேடத்தில் சரத்குமார் நடித் தார். இப்படம் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் உருவானது. ராகவா லாரன்ஸ் இயக்கினர். இந்தியில் இவர் இயக்கும் முதல் படம். சரத்குமார் ஏற்று நடித்த திருநங்கை வேடத்தை இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஏற்றிருக்கிறார்.


கொரோனா ஊராடங்கு காரண மாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் லக்‌ஷ்மி பாம் படத்தை ஒட்டி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. அக்‌ஷய் குமார் பேச்சு வார்த்தை நடத்தி செப்டம் பர் 9 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக் கப்பட்டது. பிறகு திடீரென்று நிறுத்தப் பட்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
லக்‌ஷ்மி பாம் ஒடிடியில் ரிலீஸ் ஆவதற்கு முன் தியேட் டரில் வெளியிடுவது பற்றி இயக்குனர், தயாரிப்பாளர். ஆகியோர் ஹீரோவிடம் பேசினர். அதற்கு அக்‌ஷய் குமார் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து லக்‌ஷ்மி பாம் ஒடிடியில் வெளியாவதிலிருந்து விலகுகிறது என பட வட்டரங்கள் தெரிவிக்கின்றன தியேட்டரில் வெளியான பிறகு ஒடிடிக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.