இங்கிலாந்து வங்கியின் கவர்னர் பதவிக்கான பட்டியலில் ரகுராம் ராஜன்

லண்டன்:

ஐக்கிய பேரரசின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் பதவிக்கான போட்டியில் ர குராம் ராஜன் இடம்பெற்றுள்ளார்.

இந்த வங்கியின் தற்போதைய கவர்னராக மார் கார்னே உள்ளார். அவருக்கு பதிலாக ரகுராம் ராஜனை நியமனம் செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டது என்று ஐக்கிய பேரரசின் வேந்தர் பிலிப் ஹாமண்டு, பைனான்சியல் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலில் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் ரகுராம் ராஜன் பெயரும் இடம்பெற்றுள்ளது. சிக்காக்கோ சார்ந்த சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியில் கவர்னராகவும் இரு ந்துள்ளார்.

2013ம் ஆண்டு ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் நியமனம் செய்யப்ப்டடார். 2014ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியக நிர்வாக இயக்குனராகவும் இருந்தார். 2016ம் ஆண்டு இவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. அதன் பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அறிவித்தார். அவருக்கு பதிலாக உர்ஜித் படேல் ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.