’மன்னன்’ ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்

ரஜினி நடிப்பில் 1992ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘மன்னன்’. இப்படத்தை பி.வாசு இயக்கினார்.

தற்போது இப்படம் மீண்டும் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. இப்படத்தை மீண்டும் இயக்கவுள்ளார் பி.வாசு. இப்படத்தின் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நகைச்சுவை வேடத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சிவலிங்கா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்திற்குப்பின் ‘மன்னன்’ படத்தை ரீமேக் செய்ய உள்ளார் பி.வாசு.

இப்படத்தின் கதாநாயகி போன்ற பல விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.