Random image

‘ரஜினி மாஸ்:’ ஒரே நாளில் 1கோடி பேர் கண்டுகளித்த ரஜினியின் ‘பேட்ட’ டிரெய்லர்

 ஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று (28ந்தேதி) வெளியான நிலையில் ஒரே நாளில் ஒரு கோடி பேர் யுடியூப் இணைய தளத்தில் பார்த்து ரசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. இந்தபடத்தில் ரஜினிக்கு இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். ஒருவர் சிம்ரன் மற்றொருவர் திரிஷா. இவர்களுடன்  விஜய் சேதுபதி, சசிகுமார்,பாபி சிம்ஹா உள்பட பல நட்சத்திரங்கள் பங்குபெற்றுள்ளனர்.  அனிருத் இசையமைத்துள்ள பேட்ட படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி ஒரே நாளில் ஒரு கோடி பார்த்து இருப்பதாக அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.