ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டன்

பெங்களூரு:

இந்தியா– ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது.

இப்போட்டியில் கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணி கேப்டனாக ரஹானே செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, ஜாஸ்ப்ரித் பும்ராஹ்ல புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் வீரர்கள் விவரம்…

ரஹானே (கேப்டன்), ஷிகர் தவான், விஜய், கே.எல். ராகுல், புஜாரா, கருண் நாயர், சாகா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப், உமேஷ், ஷமி, ஹர்திக் பாண்டியா, இஷாந்த், ஷர்துல் ஆகியோர் உள்ளனர்.