25எம் துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கணை ராஹி தங்கம் வென்று அசத்தல்

ந்தோனேசியாவின் ஜகர்தாவில்  18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைந்து வருகிறது. 4வது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபட் தங்கம் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

25எம் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு ரவுண்டுகளிலும் முன்னிலை வகித்து வந்த ராஹி, முதல்பரிசான தங்கம் பதக்கத்தை வென்றார்.

27வயதான ராஹி ஏற்கனவே  காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெற்று 3 பதங்களை பெற்றுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று முதல் தங்கத்தை தட்டிவந்த ராஹி, 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் பங்குபெற்று கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தோனேசியாவில் நடைபெற்று வரும்  ஆசிய விளையாட்டு  போட்டியில்   இந்தியா, சீனா, கொரியா, இலங்கை, பாக்கிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்