‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு வில்லனாக ரகுமான்……!

 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் வெளியான முதல் படமான ‘லூசிஃபர்’ மலையாளத் திரைப்பட உலகில் பல வசூல் சாதனைகளைப் படைத்தது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராம் சரண். அதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுஜீத் இயக்குவார் என்பது உறுதியானது.

‘லூசிஃபர்’ படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்திருந்தார். தெலுங்கில் அந்தக் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.