பகுதி-2: 2019ம் ஆண்டுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்: வேதாகோபாலன்

கிரகப் பெயர்ச்சிகளைப் பொருத்த வரையில் நான்கு பெயர்ச்சிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. குரு பெயர்ச்சி.. சனி பெயர்ச்சி, ராகு/ கேது பெயர்ச்சிகள் இவை விதியை ஒரே நாளில் திசை திருப்பக் கூடியவை.  மற்ற கிரகங்கள் பெயர்ச்சியடையும் போது அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்பவை. ஆனால் ராகுவும் கேதுவும் முந்தைய கட்டத்துக்கு நகர்பவை. அதாவது பின்நோக்கிய பயணம்.

ராகுவும் கேதுவும் எப்போதுமே நேர் எதிராக இருப்பவர்கள். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டா லும் அதில் நேர் எதிர் கட்டத்தில்தான் அமர்ந்திருப் பார்கள். ஆகவே  ராகுப்பெயர்ச்சி  நிகழும்போது தன்னிச்சையாகக் கேதுப்பெயர்ச்சியும் நடைபெறும். 

சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு  (2019)  பிப்ரவரி மாதம் 13ம் தேதி ராகு மற்றும் கேதுப் பெயர்ச்சி நிகழ்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசிக்கு வந்தால் சரியாகப் பதினெட்டு மாதங்கள் அங்கு தங்கிப் பலன்களை அளிப்பார்கள்.  பலன்கள்  இதோ….

சிம்மம்

வெளிநாட்டில் உள்ள உறவினர்கள்/ நண்பர்கள்/ உடன்பிறந்தவர்கள்/ மகன்/ மகள் / மற்றையோரிடமிருந்து நீங்க ஆவலாய் எதிர்பார்த்துக் கிட்டிருந்த நல்ல நியூஸ் வருமுங்க. நீங்களே  வெளிநாட்டில் வேலை தேடிக்கிட்டிருந்தீங்கன்னா.. உங்களுக்கு நிச்சயமா உடனடியாகக் கிடைக்கும்.  வெளிநாட்டிலிருந்து வருமானம் வரும். நேரடியா       ஃபாரின் போய் வேலை பார்க்கலைன்னாலும் உள்ளூரில் உள்ள வெளி நாட்டு நிறுவனத்தில் சேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்

பயணங்களால் லாபம் அதிகரிக்கும். அலுவலகப்பயணங்கள் அடிக்கடி நிகழும். அவற்றின் காரணமாக நல்ல லாபம் கிடைப்பது ஒருபுறம் இருக்கட்டும். மேலதிகாரிகளிடம் உங்க ளுக்கு மிக நல்ல பெயர் பெற்றுத் தரும் சாதனைப்பட்டியல்களாக இவை திகழும். சிநேகிதி கள்/  நண்பர்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தவர்கள் ஏமாற்றமளிக்கும் வகையில் முகத்தில் கருப்பு பெயின்ட் பூசிவிடுவார்கள். கவனமாயிருங்கள். புதிய நட்புகளிடம் அதிக உரிமை எடுக்கவோ, கொடுக்கவோ வேண்டாம்.

நவம்பருக்குப் பிறகு குழந்தை வரம் வேண்டியிருந்தவங்களுக்கு குட் நியூஸ் உண்டுங்க. ஏற்கனவே நீங்க அப்பா/ அம்மா ஆகியிருந்தால், நீங்க பெற்ற செல்வங்கள் உங்களின் மனசைக் குளிர்விக்கும் வகையில் நடந்துக்குவாங்க. புண்ணிய காரியங்கள் நிறையச்  செய்வீங்க. மனசில் இருந்த தீய எண்ணங்களுக்கு டாட்டா காண்பிச்சுத் தூய எண்ணங் களை ஆட்டமேட்டிக்கா நிரப்புவீங்க.

2020 ன் இரண்டாவது பாதியில்

இனி நண்பர்களால் நிரந்தர நன்மை ஏற்படும். பேங்க் லோனுக்கு மனு செய்திருந்தால் ஏகப்பட்ட தாமதங்கள் இருந்தாலும்… கட்டாயம் கிடைக்கும். கடன் பாக்கிகளை மடமடன்னு அடைப்பீங்க. அலைச்சலும் தேடலும் நிறைய இருந்தாலும் நிறைவான நன்மைகள் உண்டு.

கன்னி

சுப நிகழ்ச்சிகள்  சட்டென்று முடிவாகும். சில பேருக்குத் தடைப்பட்டுக் கொண்டு போய்.. 2019 ன் இறுதியில்தான் திருமணம் நிகழும். தேவை யில்லாத டென்ஷன்கள் வேண்டாம். தாயாரின் உடல் நிலை லேசாக பயமுறுத்திப் பிறகு சரியாகும். வாகனங்கள் வாங்குவதானால் மிகச் சரியாக ஆராய்ந்து முடிவெடுங்கள். விஷயம்  தெரிந்தவர்கள்  மற்றும் அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்டு எதுவும் தீர்மானியுங்கள்.. திருமணம் நிச்சயமானால் அந்த வரன் பற்றி மிக நன்றாக விசாரித்துவிட்டுத் தேதி குறிப்பது நல்லது.

புது வேலை மாற வாய்ப்பு உள்ளது. பல வித அலைச்சலுக்குப் பிறகு நல்லபடியாக வேலையில் அமர்வீங்க. வேலைக்காக வேண்டி வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலம் என்று போக வேண்டியிருக்கலாம். முகவரி மாறும்.

நவம்பருக்குப் பிறகு

ஹப்பாடா. மம்மியின் உடல் ஆரோக்யம் பற்றி இருந்து வந்த டென்ஷன் சரியாகும். வாகனம் வாங்குவீங்க. சிலருக்கு வாகனத்தின் மூலம் நிறைய லாபம் வரும். அதாவது வியாபார நோக்கத்திற்காக வாங்கிய வானங்கள் நன்மை தரும்.

2020 ன் இரண்டாவது பாதியில்

குழந்தைங்க நிலையா ஒரு வேலையில் அமர்வாங்க. அவங்களுக்குத் திருமணம் ஏற்பாடாகும். எனினும் எதிலும் தடை தாமதங்களும் மந்தப் போக்கும் இருக்கத்தான் செய்யும். மனசைத் தயார் நிலையில் வெச்சுக்கிட்டா அவங்களுக்கும் உங்களுக்கும் டென்ஷன் இருக்காது.

துலாம்

அப்பாவின் உடல் நிலையில் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்படும். அதெல்லாம் முறையாய்க் கவனிச்சு சரி செய்துடுவீங்க. திடீர் அதிருஷ்டங்கள் இத்தனை காலம் இருந்த அளவுக்கு இனி இருக்காது. அல்லது அவற்றின் அளவு குறையலாம். அலுவலகத்தில் எப்பவும் போல டென்ஷனும் வெற்றியும் இருக்கும்.

சகோதர சகோதரிகளிடம் நல்லபடியாக உறவு இருக்கும். அவர்கள் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்கள். முன்பு மனசில் இருந்து வந்த தேவையில்லாத பயங்கள் போய் இனி நெஞ்சை நிமிர்த்தி தைரியமாய் வளைய வருவீங்க. குடும்பத்தில் நல்ல சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நவம்பருக்குப் பிறகு

வேலை சம்பந்தமான நல்ல மாற்றம் நிகழும். சம்பளம் உயரும். பெரிய அளவில் பாராட்டு கள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு நிறைய உள்ளது. ஏற்கனவே வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் புதிய முன்னேற்றங்கள் காண்பீர்கள்.

2020 ன் இரண்டாவது பாதியில்

வாகனங்களால் ஏற்பட்டு வந்த தொந்தரவுகள், பிரச்சினைகள் எல்லாம் போயே போச். இனி நிம்மதி.  பழைன வாகனங்களை வழியனுப்பிவிட்டுப் புது வாகனங்கள் வாங்கவும் வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு அதிருஷ்டத்தைக்கொண்டு தரும். மேலும் நீங்க விரும்பியபடியே அழகாக அமையும். கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

விருச்சிகம்

எத்தனையோ காலமாய்த் தடைப்பட்டிருந்த நல்ல விஷயங்களெல்லாம்  திடீர்னு தடை நீங்கியது போல் மடமடவென்று ஓட்டமாக ஓடி நிறைவேறுங்க. குடும்ப நிகழ்வுகளில் சின்ன சுணக்கம் இருக்கும். ஒருவருக்கொருவர் ஒத்துக்போக வேண்டும். யாரும் அனுசரிக்கவில்லைன்னா நீங்கதாங்க விட்டுக்கொடுத்துப் போகணும். ப்ளீஸ்.

ஆரோக்யத்தை என்னமா அலட்சியப்படுத்தறீங்கப்பா. இத்தனை காலம் அதனாலெல்லாம் பெரிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருந்தன. தீய பழக்கங்களை விட்டுடுங்க. கெட்டவங்க சகவாசம் அறவே வேண்டாம். நீண்ட பயணங்களின்போது உங்க உடமைகளை ரொம்பவும் ஜாக்கிரதையா வெச்சுக்குங்க.

நவம்பருக்குப் பிறகு

சூப்பரான காலகட்டம். லாபங்கள் குவியும். வங்கிக் கணக்கில் தொகை உயரும். குடும்பத் தில் டக் டக்கென்று நீங்கள் பல காலம் எதிர்பார்த்துக்கிட்டிருந்த விஷயங்கள் நிறைவேறும். சுபகாரியங்கள் நடக்கும். உங்களுக்காகவும் மத்தவங்களுக்காகவும் டிரஸ் வாங்குவீங்க.. நகைங்க வாங்குவீங்க. வாழ்க்கை ஜாலியாப் போகுங்க.

2020 ன் இரண்டாவது பாதியில்

பயமளித்துக்கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் நிம்மதி தரும் வகையில் மாற்றம் பெறும். சகோதர சகோதரிகளின் வாழ்வில் பெரிய முன்னேற்றம் உண்டு. அப்பாவின் முன்னேற்றத்தில் சின்ன இடையூறுக்கற்கள் இருக்கும். அவற்றை மெதித்தோ.. தாண்டியோ.. நொறுக்கியோ அவர் முன்னேறி வருவார். எனினும் அதற்குச் சற்று நேரம் பிடிக்கும்.

தொடரும்-….

(நாளை….  தனுசு, மகரம், கும்பம், மீனம்)