2019ம் ஆண்டுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்: வேதாகோபாலன்

கிரகப் பெயர்ச்சிகளைப் பொருத்த வரையில் நான்கு பெயர்ச்சிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. குரு பெயர்ச்சி.. சனி பெயர்ச்சி,, ராகு/ கேது பெயர்ச்சிகள் இவை விதியை ஒரே நாளில் திசை திருப்பக் கூடியவை. ராகுவும் கேதுவும் எவ்வாறு தோன்றினார்கள் என்பதும் அவர்களுக்கும் பாம்புகளும் என்ன சம்பந்தம் என்பதும் அவை சாயா அல்லது நிழல் கிரகங்கள் என்பதும் வானின் கோள்களுடன் அவர் களுக்கு இடம் இல்லை என்பதும் உங்களுக்கெல்லாம் புதிதாக நான் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. மற்ற கிரகங்கள் பெயர்ச்சியடையும் போது அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்பவை. ஆனால் ராகுவும் கேதுவும் முந்தைய கட்டத்துக்கு நகர்பவை. அதாவது பின்நோக்கிய பயணம்.

ராகுவும் கேதுவும் எப்போதுமே நேர் எதிராக இருப்ப வர்கள்.அதாவது எந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டா லும் அதில் நேர் எதிர் கட்டத்தில்தான் அமர்ந்திருப் பார்கள்.

ஆகவே  ராகுப்பெயர்ச்சி  நிகழும்போது தன்னிச்சை யாகக் கேதுப்பெயர்ச்சியும் நடைபெறும். 

சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு  (2019)  பிப்ரவரி மாதம் 13ம் தேதி ராகு மற்றும் கேதுப் பெயர்ச்சி நிகழ்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசிக்கு வந்தால் சரியாகப் பதினெட்டு மாதங்கள் அங்கு தங்கிப் பலன்களை அளிப்பார் கள்.

பொதுவாகவே இவர்கள் கெடுபலன்களைத்தான் கொடுப்பார்கள் என்று சிலபேர் நினைக்கிறார்கள். அப்படி அல்ல. இவர்கள் நிழல் கிரகங்கள் என்பதற் கேற்ப இவர்கள் எந்த கிரகத்துடன் அமர்ந்திருக் கிறார்கள்… எந்த கிரகங்கள் இவர்கைளைப் பார்க் கிறார்கள் கேந்திர திரிகோணங்களில் இருக்கிறார்களா மறைவிடங்களில் அமர்ந்திருக்கிறார்களா என்பதை யெல்லாம் பொருத்துப் பலன்கள் மாறும். இந்த ஆண்டு சில மாதங்களுக்கு குரு பகவானின் சம்பந்தம் இருப்பதாலும் குரு பார்வை கிடைப்பதாலும் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் கிடைக்கின்றன.  இதோ,, பலன்கள் …

மேஷம் :

அப்பாவின் உடல் ஆரோக்யத்தில் நிறையக்கவனம் செலுத்துங்கள். குறிப்பாய்க் காலில் பிரச்சினை வந்தால் அதிக கவனம்  தேவைங்க. பெரிய அளவில் உயிருக்கு ஆபத் தெல்லாம் இருக்காதுங்க. ஆனாலும் சின்னச்சின்ன பிரச்சினைன்னாலும் அது அதிக நாளைக்கு நீடித்து சிரமப்படுத்த வாய்ப்ப உள்ளது.  தயவு செய்து அதிருஷ்டத்தை யெல்லாம் நம்பவே நம்பாதீங்க. உழைப்பு தவிர எதுவுமே கைகொடுக்காது. ஆனால் உழைப்பு  நிறையவே கைகொடுக்கும் என்பது பற்றி எந்தவிதச் சந்தேகமும் வேண்டாம், தந்தை வழியில் வர வேண்டிய சொத்துகள் மார்ச்சுக்குள் வர்வில்லை என்றால் 2019 இறுதியில்தான் வரும். ஆனால் கட்டாயம் வரும். பதற்றம்/ அவசரம்/ டென்ஷன் இல்லாமல் காத்திருங்கள் போதும்.

மூத்த சகோதரர்களிடம் வம்பு வழக்கில்லாமல் அனுசரித்துப் போவது நல்லதுங்க. தெனாலிமாதிரி எதற்கெடுத்தாலும் பயமயம் வேண்டாம், தேவையில்லாத பயங்களைக் குப்பைக்கூடையில் போட்டு தைரியமாக உலாவுங்க. நீங்க பிரச்சினைன்னு நினைக்கும் எதுவும் பிரச்சினையே இல்லைன்னு புரிஞ்சுக்குங்க. பொதுவாய் எப்போதும் உள்ள மனோதிடத்தை மட்டும் எப்போதும் இழக்கவே இழக்காதீங்க. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள்.. நல்ல செலவுகள்.. கட்டாயம் உண்டு. பொதுவாகவே எல்லாமே சற்று எதிர்பார்த்ததைவிட நிதானமாகவே நகரும். அதைப்பார்த்து டென்ஷன் வேண்டாம். மனசை மட்டும் தயார் செய்துக்கிட்டீங்கன்னா போதும்.

நவம்பருக்குப் பிறகு பிரமாதமான அதிருஷ்டங்கள் நிகழும். வழக்குகள் வெற்றியடையும். தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

2020 ன் இரண்டாவது பகுதியில் மேலும் பல நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

 ரிஷபம்

உடல் ஆரோக்யத்தில் மிகுந்த கவனம் செலுத்தி எக்ஸர்சைஸ் என்றும் டயட்டிங் என்றும் எப்போதும் ஜாக்கிரதை உணர்வுடன் இரப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாதுங்க. அப்படி இல்லாமல் கண்ட நேரத்தில், கண்ட இடத்தில், ஆரோக்யத்துக்கு உகந்ததற்ற உணவைச் சாப்பிடுபவர்களுக்குச் சற்றுப் போதாத வேளை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே இந்த இரண்டாவது வகை நேயர்கள் முதல் வகைக்கு உடனடியாக மாறிக்கொண்டாக வேண்டுங்க.

குடும்பத்தில் அவ்வப்போது தற்காலிகமாக மிகச்சிறிய அளவில் சலசலப்புகள் இருக்கக்கூடும். சற்று அமைதியாக இருங்க. சரியாகும். நீங்களும் சேர்ந்து கோபத்தில் குதிச்சால்தான் பிரச்சினை ஏற்படும், சின்னச்சின்னப் பிரிவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ளவங்களின் படிப்பு, உத்யோகம்  அல்லது திரும்ணம் போன்ற நல்ல காரணங்களாலதான் அந்தப்பிரிவு இருக்கும் என்பது சந்தோஷமான விஷயம்தான். நிறைய சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும்.  வழிபாடு சம்பந்தப்பட்ட பயணங்கள் இருக்கும். மனசில் முழுக்கக்குதூகலம் நிரம்பியிருக்கும்.

நவம்பருக்குப்பிறகு வயிறு சம்பந்தப்பட்ட சின்னப் பிரச்சினைகள் இருக்கும் என்றாலும் உடனுக்குடன் அவற்றிலிருந்து வெளியேறி நிம்மதி காண்பீர்கள்.

2020 ன் இரண்டாவது பாதியில் மாணவர்கள் அதிருஷ்டத்தை நம்ப வேண்டாம். கடுமையான உழைப்புதான் துணை செய்யும். பண முதலீடுகள் சற்று தாமதமான பலனைத்தான அளிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் சற்றுக்குறைவாகக் கிடைக்கும். எனினும் லாபம் கிடைக்கும்.

மிதுனம்

கடந்த சில காலமாகப் பலனளித்துக்கொண்டிருந்த குருட்டு அதிருஷ்டம் இனி கை கொடுக்காது என்பது சற்று வருத்தம் அளிக்கும் செய்திதான் என்றாலும் நியாயமாக, நேர்மையாக, கடின உழைப்பை மட்டுமே நம்புபவர்களுக்கு எந்தக் கஷ்டமும் கவலை யும் வராது என்பது நல்ல செய்திதானேங்க. வெளிநாட்டு வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தவங்களுக்கு அருமையான நேரம் ஆரம்பிச்சாச்சுங்க. அது கல்விக்கானாலும் சரி,.,, வேலைக்கானாலும் சரி,.. கல்யாணமாகிப்போவதானாலும் சரி.. ஏதோ ஒரு வகையில் விசா வாங்கி விமானம் ஏற வேளை வந்தாச்சு.

கணவன் மனைவிக்குள் சிறிய சண்டை வந்தால் அதைச்சிறிய அளவிலேயே வைச்சுக்கப் பாருங்க. வீணா வார்த்தையை வளர்க்க  வேண்டாம். குறிப்பாக வெளி மனிதர்களை மத்யஸ்தம் செய்ய அனுமதிக்காதீங்க. அது  உங்க அப்பா அம்மாவாவே இருந்தாலும் சரி.  கணவர் /  மனைவி வெளிநாடு அல்லது வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். சிறிய பிரிவுதான். சகிச்சுக்குங்க.

நவம்பருக்குப் பிறகு சூப்பர் காலகட்டம் ஆரம்பம். திருமணமாகாதவங்களுக்குச் திருமணம் நிச்சயமாகும். அனேகமாக வெளிநாட்டு சம்பந்தம்  அமையும். நிறையப் பயணங்கள் செய்வீங்க. மனதில் அருளும் அமைதியும் நிலவும். செல்வாக்கு அதிகரிக்கும். கணவர் /  மனைவிக்குப் பெரிய நன்மை வெயிட்டிங்.

2020 ன் இரண்டாவது பாதியில் அதிருஷ்ட  தேவதை அள்ளி அணைப்பாள். போன வருஷம் கோணலாய்ப்போன விஷயம் எல்லாம் சரியாகி மனசில் அமைதியும் நிம்மதியும் நிறையும்.

கடகம்

கொஞ்சமா நஞ்சமா. எத்தனை கஷ்டங்கள் பட்டீங்க கடந்த ஒன்றரை வருஷத்தில். சருமப் பிரச்சினை உள்பட எத்தனை மன உளைச்சல்களை அனுபவித்தீர்கள். பல காரணங்களால் தன்னம்பிக்கையே இழந்து “எனக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை இறைவா“ என்றெல்லாம் நிந்தையால் இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தீர்கள். இனி எல்லாம் கல் எறிந்தவுடன் பறக்கும் காக்கைக்கூட்டம்  போலக் காணாமல் போகும்.

நண்பர்கள் பகைவர்கள் யார் யார் என்று சரியாகப் புரிந்து கொள்வீர்கள். புரிய வைச்சுடுவாங்க. கடன்களுக்கு மனுப்போட்டுவிட்டுக் காத்திருந்தீங்க. இனி கிடைக்கும். எதிரிங்க தெறிச்சு ஓடும்படியான காரியங்கள் உங்கள் முயற்சி இன்றியே தன்னிச்சையாக நடக்கும்.

நவம்பருக்குப் பிறகு, புதிய நண்பர்களும் சிநேகிதிகளும் நிறையக் கிடைப்பாங்க. அவங்களால எதிர்காலத்தில் மட்டுமில்லாமல் உடனடியாகவும் நன்மைகள் உண்டுங்க.

2020 ன் இரண்டாவது பாதியில் கணவர்/ மனைவி திட்டமிட்ட விஷயங்கள் தாமதமாகலாம். திருமண மாகாதவர்களா நீங்க? எனில் திருமணத்தில் மினி சைஸ் தடைகளும் தாமதங்களும் ஏற்பட வாய்ப்பிருக்கு. அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. இப்போ உங்களுக்கு ஆரம்பிச்சிருக்கும் பக்தி காரணமாக நிறையக் கோயில்களுக்குப் போவீங்க. அதுவே பரிகாரமாகி உங்களுக்கு உதவும். குட் லக்.

தொடரும்-….

(நாளை….  சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

Leave a Reply

Your email address will not be published.