லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் காந்தி இன்று நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளானர். கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.
நாடு முழுவதும் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உத்தரப் பிரதேசம் புறப்பட்டனர்.
ஆனால், உத்தரப்பிரதேச மாநில காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். முன்னேறிச் சென்ற ராகுல், போலீசாரால் கீழே தள்ளப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானாது. தொடர்ந்து, இன்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க புறப்பட்டனர். ராகுல்,  பிரியங்காவுடன் 5 பேர் மட்டுமே செல்ல அனுமதி தரப்பட்டது.

இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஹத்ராஸ் புறப்பட்டனர். இருவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, அவர்களால் பெண்ணை கடைசியாக ஒருமுறைகூட பார்க்க முடியவில்லை.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் தமது பொறுப்பை உணர வேண்டும். அவர்களுக்கு நீதியை பெற்று தரும் வரை ஓய மாட்டோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் குடும்பத்தை பாதுகாப்பது உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் கடமையாகும் என்று கூறினார்.