தருவதாக  வாக்குறுதி அளித்த ரூ, 15 லட்சம் எங்கே? : ராகுல் காந்தி  கேள்வி

அமேதி

பிரதமர் மோடி அறிவித்த ரூ. 15 லட்சம் ஏன் மக்கள் வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை என ராகுல் காந்தி கேட்டுள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவராக பொறுப்பேற்றார்.    அமேதி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆன பிறகு முதல்முறையாக தனது தொகுதிக்கு வந்துள்ளார்.  நேற்று அவர் அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி உள்ளார்.

அப்போது ராகுல் காந்தி, “மத்தியில் ஆளும் மோடி அரசு மக்களிடம் தொடர்ந்து பொய் கூறி வருகிறது.   மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மதிப்பது கிடையாது.    மோடி,  அரசு அமைப்பதற்கு முன்பு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வதாகக் கூறினார்.    ஆனால் மூன்றரை வருடங்கள் ஆகியும் ஏன் இன்னும் பணம் செலுத்த வில்லை?”  எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rahul asked modi where is 15 lakhs
-=-