டில்லி,

நேற்று நள்ளிரவு நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது நள்ளிரவு தமாஷ் என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.

ஜிஎஸ்டி அமல்படுத்துவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் புறக்கணித்துள்ள வேளை யில், வெளிநாட்டில் இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியிருப்பது  மோடி அரசின் சுய விளம்பர விருந்து, நள்ளிரவு தமாஷ் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் மாபெரும் வரி சீர்த்திருத்தமாக கருதப்படும் ஜி.எஸ்.டி., நேற்று நள்ளிரவு முதல் அமலானது.

இதுகுறித்து ராகுல்காந்தி, சமூக வலைதளமான ‘டுவிட்டரில்’  மத்திய அரசின் நிகழ்ச்சி, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களை, வர்த்தகர்களை ஜி.எஸ்.டி., வரி விதிப்பு வேதனைக்குள்ளாக்கி உள்ளது; பயமுறுத்துகிறது.

செல்லாத நோட்டு அறிவிப்பை போலவே, அவசர கோலத்தில், மேற்கொண்ட நடவடிக்கை இது. எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படாமல், நடைமுறையை பின்பற்றாமல், வர்த்தகர்கள், மக்கள், மாநில அரசுகள் தயாராகாத நிலையில், திட்டமிடல் ஏதும் இல்லாமல், அவசர கதியில் செயல்படுத்த படுகிறது; நள்ளிரவு நிகழ்ச்சி, ‘ஜி.எஸ்.டி., தமாஷ்’.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.