டில்லி:

ழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு தொகுதி மக்களுக்கு உதவுங்கள் என்று பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக ராகுல்காந்தி வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்  காங்கிரஸ் கட்சிமுன்னாள் தலைவர் ராகுல்காந்தி. தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு தொகுதி பலத்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பருவ மழை காரணமாக  வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயநாடு பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் இன்று மீண்டும் அதிகாலையில் அதிக வீடுகள் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த  இந்த நிலச்சரிவில் ஏராளமானோர்  மாட்டிக்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 100 பேர் வரை மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 25 பேர் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி. யான ராகுல்காந்தி, பிரதமர் மோடியிடம், போன் மூலம் பேசி, வயநாடு பகுதிக்கு உடடினயாக உதவி தேவை என்றும், அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யும்படி வலியுறுத்தினார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் 315 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, அதில், 22000 பேர் தங்கி உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார். இந்த முகாம்களில் பெரும்பாலானவர்கள் வயநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மழையின் காரணமாக  மாநிலம் முழுவதும் இறப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தவர்,  மழையின் தீவிரம் நாளை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.