சுபால் நகர், பீகார்

பீகார் மாநில தேர்தல் பிரசாரத்தில் மோடியின் ஆட்சி அநியாயமாக நடக்கிறது என ராகுல் காந்தி பேசி உள்ளார்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தலைவர்களும் நாடெங்கும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மும்முரமாக பிரசார பயணம் செய்து வருகிறார். அவ்வகையில் அவர் பீகார் மாநிலத்தில் பிரசாரம் செய்தார்.

பீகார் மாநிலம் சுபால் நகரில் ஒரு பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி,”மோடி கடந்த மக்களவை தேர்தலில் தாம் நட்டுக்கு ஒரு சிறந்த காவலாளியாக இருப்பதாக கூறி வாக்கு கேட்டார். அதை நம்பி மக்களும் அவருக்கு வாக்களித்தனர்.

மோடியோ அனில் அம்பானி போன்ற பணக்கார தொழிலதிபர்களுக்கு மட்டும் காவலாளியாக செயல் படுகிறர். அதனால் மக்கள் அவரை இந்த மக்களவை தேர்தல் மூலம் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து விட்டனர்.

அந்த காவலாளியின் முகத்தில் இப்போது மிகவும் பயம் தெரிகிறது. ரஃபேல் ஒப்பந்த ஊழல் வழக்கு முறையாக விசாரிக்கப்பட வேண்டும். அப்படி முறையாக விசாரிக்கப்படால் தொழிலதிபர் அனில் அம்பானியுடன் அவருடைய காவலாளி மோடியும் சிறை செல்வார்.

முந்தைய மன்மோகன் சிங் அரசு பீகார் மாநிலத்துக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றியது. தற்போது மத்தியிலும் பீகாரிலும் பாஜக கூட்டணி அரசு நடைபெற்றாலும் மக்களுக்கு எந்த ஒரு பெரிய திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

இந்நாட்டு மக்களுக்கு மோடியின் அரசு பல அநியாயங்களை செய்துள்ளது அதை சரிப்படுத்த நியாய் திட்டத்தை காங்கிரஸ் செயல்படுத்த உள்ளது” என தெரிவித்தார்.