பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சர்பஞ்ச் குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்

புதுடெல்லி:

யங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் கட்சி சர்பஞ்ச் அஜய் பண்டிதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் வன்முறை ஒருபோதும் வெல்லாது என்று குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் ஜனநாயக வழிமுறைகளுக்காக உயிரை தியாகம் செய்த அஜய் பண்டிதாவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன், இந்த வருத்தத்திலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். வன்முறை ஒருபோதும் வெல்லாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் அனந்த்நாகில் உள்ள லோக்பவன் மீது பண்டிதா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed