தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் பாதியை விட்டுக் கொடுத்த பயிற்சியாளர் யார் தெரியுமா?

மும்பை

னது அணியில் விளையாடிய ஜுனியர் கிரிக்கெட் வீரர்களுக்காக தனது பரிசுத் தொகையில் பாதியை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் விட்டுக் கொடுத்துள்ளார்.

ஜுனியர் கிரிக்கெட் அணி எனப்படும் 19 வயதுக்குட்பட்ட  கிரிக்கெட் வீரர்கள் அணிகளுக்கான உலகக் கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றது.   இதில் இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது.   இதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம்,  விளையாட்டு வீரர்களுக்கு ரூ.30 லட்சம் மற்றும் ஆதரவு பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் என பரிசுத் தொகை இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டது.

ராகுல் டிராவிட், “இந்த வெற்றி அனைவரது உழப்பினாலும் கிடைத்தது.   நான் மட்டும் காரணம் அல்ல.  அனைவருக்கு பரிசுத் தொகை சமமாக வழங்க வேண்டும்.   தேவைப் பட்டால் எனது பரிசுத் தொகையை நான் விட்டுத் தரத் தயார்”  என அறிவித்தார்.    டிராவிட் இவ்வாறு அறிவித்தது கிரிக்கெட் வாரியம் மனதை நெகிழச் செய்தது.

இதனால் தற்போது டிராவிட் உட்பட அனைவருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்தது.    வீரர்களுக்காக தனக்கு கிடைத்த பரிசுப் பணத்தில் பாதியை விட்டுக் கொடுத்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே அவருக்கு மேலும் பாராட்டை அளித்துள்ளது.