ராகுல் திராவிட்: ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த 5வது இந்திய வீரர்

 ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்தியவீரர் ராகுல் திராவிட் இணைந்துள்ளார். இவர்  ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த இந்தியாவின்  5வது இந்திய வீரர் ஆவார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் திராவிட்,இளம் வீரர்கள் ஒவ்வொருக்கும் நடமாடும் கிரிக்கெட் பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர்.  இந்தியாவின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட்.

இதுவரை 343 போட்டிகளில் விளையாடி அவர், 10820 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். போட்டியில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 153. 12 சதங்களும், 82 சதங்களும் எடுத்துள்ள ராகுல் திராவிட் 317 போட்டிகளில் மட்டையை பிடித்து விளாசி உள்ளார். 946 பவுண்டரிகளும, 46 சிக்சர்களும் விளாசி உள்ள ராகுல் திராவிட் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிஐன் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்துள்ளார்.

அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் திராவிட், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிலைர் டெய்லர் ஆகியோர் ஐசிசி-யின் `ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர்களான சுனில் காவஸ்கர், கபில்தேவ், அணில் கும்ப்ளே, பிஷன் சிங் பேடி ஆகியோர் இடம்பிடித்துள்ள நிலையில் 5வது வீரராக ராகுல் இணைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், இந்திய அணி கேப்டனாகவும் தனது பங்களிப்பை திறம்படச் செய்து பெருமை சேர்த்தவ்ர் ராகுல் திராவிட்.