தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும்….ராகுல் டிராவிட்

டில்லி:

தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இந்திய அணி தற்போது மிக வலுவாக உள்ளது. தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற வாய்ப்புள்ளது. சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நமக்குத் தேவைப்பட்டால் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை வைத்துள்ளோம். அஸ்வின், ஜடேஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

பேட்ஸ்மேனக்ள ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தவர்கள். அவர்கள் 40 முதல் 50 டெஸ்டுகள் விளையாடியுள்ளனர். அதனால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.