பெங்களூரு:

கிரிக்கெட் நட்சத்திரமான ராகுல் டிராவிட்டிடம் பெங்களூரு நிறுவனம் ரூ. 4 கோடி மோசடி செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்.இவர் தற்போது இந்திய ‘ஏ’ அணி மற்றும் ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.

2014-ம் ஆண்டுவிக்ரம் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிதி நிறுவனத்தில் டிராவில் முதலீடு செய்தார். 2015-ம் ஆண்டு அவரது பணம் திரும்பியது. மேலும், ரூ.20 கோடியை அந்நிறுவனத்தில் டிராவிட் முதலீடு செய்தார். இதில் ரூ.16 கோடி அவருக்கு திரும்பி வந்து விட்டது.

ரூ.4 கோடி நிலுவை இருந்தது. இதற்கிடையே அந்நிறுவனம் 800 பேரிடம் ரூ.500 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.இந்த வகையில் ராகுல் டிராவிட்டிடம் அந்த நிறுவனம் ரூ.4 கோடி மோசடி செய்தது. இது குறித்து அவர் பெங்களூர் சதாஷிவ நகர் போலீசில் புகார் அளித்தார். மேலும், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிரகாஷ் படுகோனே ஆகியோரும் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.