வேலையில்லா திண்டாட்டத்தால் மத்திய அரசு மீது மக்கள் கோபம்….ராகுல்காந்தி

பெர்லின்:

ஜெர்மனி ஹம்பர்கில் உள்ள ப்யூசெரியஸ் சம்மர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, கும்பலாக அடித்து கொல்வது, தவறான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை விமர்சனம் செய்து பேசினார். தலித் மீதான தாக்குதல், கும்பல் தாக்குதல் போன்ற சம்பங்களால் இந்திய மக்கள் மத்திய அரசு மீது கோபத்தில் உள்ளனர். நலிவடைந்த மக்களுக்கான திட்டங்களை வகுப்பதில் ஆளும் பாஜக கூட்டணி நலிவடைந்துள்ளது.

இதன் பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘உங்களை வெறுப்பர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்பதே காந்திய சிந்தனை. வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தான் என் மீது வெறுப்புணர்வான கருத்துக்களை அவர் தெரிவித்தபோது, அவருக்கு பதிலுக்கு அன்பபை தெரிவிக்க முற்பட்டேன்.

என் மீது பலரும் அன்புடன் நடந்து கொள்கின்றனர். அவர்களை கட்டித்தழுவி எனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறேன். அதற்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஆனால் நான் கட்டித் தழுவியதை பிரதமர் மோடி விரும்பவில்லை. பிரதமரை நான் கட்டித் தழுவியதை அவர் விரும்பவில்லை. இருந்தாலும் வெறுப்பை போக்கும் எனது எண்ணம் வெற்றி பெற்றுள்ளது. அன்பினால மட்டுமே வெறுப்பை மாற்ற முடியும் என்பதில் காந்தி உறுதியாக இருந்தார், எனவே எனது செயல் சரியானது என்றே கருதுகிறேன்.

எனது செயலால் எங்கள் கட்சியினர் சிலரும் ஆச்சரியடைந்தனர். பிரதமரை நான் கட்டித் தழுவியதை அவர்கள் ஏற்கவில்லை. அப்படி நான் செய்து இருக்கக்கூடாது என்று பின்னர் அவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் கருத்தை நான் ஏற்கவில்லை. அன்பை விதைப்பதன் மூலம் நம் மீதான வெறுப்பை களைய முடியும். வன்முறையை வன்முறையால் தடுக்க நினைத்தால் அது மீண்டும் மீண்டும் வந்து நம்மை தாக்கும். அதனை தீர்க்க அன்பால் மட்டுமே முடியும்” என்றார்.