கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களை அவமதிக்கும் மத்திய அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

மத்திய அரசு கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை கையாள வில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து  குற்றச்சாட்டுக்களை கூறி வைத்து வருகிறார்.

இந் நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக அவர் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தரவுகள் இல்லாத அரசு. விளக்கேற்றுவதையும், தட்டுவதையும் விட கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களின் பாதுகாப்பும் மரியாதையும் முக்கியம். கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன் என்றும் அவர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.