கைலாஷ் யாத்திரை செல்ல ராகுல் காந்தி விண்ணப்பம்

டில்லி:

கைலாஷ் யாத்திரை செல்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.

இந்துக்கள் புனித தலமாக கருதும் கைலாஷ் மானசாரோவர் யாத்திரைக்கு செல்ல ராகுல் விருப்பம் தெரிவித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரது விண்ணப்பத்துக்கு தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித யாத்திரை செல்ல பிப்ரவரி 21ம் தேதி விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச்23-ம் தேதி கடைசி நாளாகும். கடந்த 8-ம் தேதி தொடங்கிய யாத்திரை செப்டம்பர் 8-ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.