காங்கிரஸ் கட்சிக்கு புதிய தேசிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம்!

டில்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய 10 தேசிய செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இளந்தலைவரான ராகுல்காந்தி தலைமை பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அவரது மதிப்பு பல மடங்கு உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக 10 பேரை புதிதாக ராகுல்காந்தி  நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில், பவான் கெரா, ராகினி நாயக், ராஜிவ் தியாகி, அகிலேஷ் பிரதாப் சிங், கவுரவ் வல்லப், ஜெய்வீர் ஷெர்கில் சையத் நசீர் உசைன், ஹீனா கவாரே, ஸ்ரவன் டாசோஜ் மற்றும் சுனில் அஹிரே ஆகியோர் புதிய தேசிய செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே  மூத்த செய்தி தொடர்பாளர்கள்  9 பேர் உள்பட  26 செய்தித் தொடர்பாளர்கள் இருந்து வருகின்றனர்.