அரசுத் தேர்வு மற்றும் பணிகளுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து: ராகுல் காந்தி

புதுடெல்லி: முதற்கட்ட லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், அரசாங்க தேர்வுகள் மற்றும் பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கைவிடப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தனது அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில், இந்த தகவலை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர்.

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கானோர், அரசுத் தேர்வுகளுக்கும், அரசுப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு அதீத முக்கியத்துவம் பெறுகிறது.

நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும், சுகாதார உரிமைக்கான ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்படுமென்ற தனது கட்சியின் கொள்கையை, ராகுல் காந்தி ஏற்கனவே பகிர்ந்து கொண்டுள்ளார்.

– மதுரை மாயாண்டி

You may have missed