டெல்லி: பிரதமர் கேர்ஸ் நிதி குறித்த தகவல்களை மறுத்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக பேசி உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் மூலம் மத்திய அரசு  நிதி திரட்டி வருகிறது. திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் நிதி அளித்து வருகின்றனர்.

பேரிடர் காலங்களில் உதவ பிரதமர் தேசிய நிவாரண நிதி என்ற அமைப்பு இருக்கும்போது எதற்காக பிஎம் கேர்ஸ் நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வருகின்றன.

பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி, சி.பி.சி.எல்., எனும் தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், பிஎம்கேர்ஸ் நிதியை தேசியப் பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந் நிலையில், தகவல் அறியும் ஆர்வலர் பி.எம் கேர்ஸ் நிதியைப் பற்றி தெரிந்து கொள்ளுமாறு முறையிட்டதை தொடர்ந்து பிரதமர் அலுவலகம்  தகவல் மறுக்க நிதி குறித்த தகவல்களை மறுத்ததற்காக ராகுல் காந்தி பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.