டில்லி:

காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மன உறுதியை ஏற்படுத்தும் வகையில் அடிமட்டம் வரையிலான கட்சியின் அமைப்புடன் நேரடி தொடர்பு வைக்கும் யுக்தியை ராகுல்காந்தி கையாள திட்டமிட்டுள்ளார். பூத் அளவிலான கட்சியின் தொண்டர்களுடன் வீடியோ மெசேஜ், தொலைபேசி அழைப்பு போன்ற வழிகளில் இந்த தொடர்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மோசமான தோல்வி அடைந்த மாநிலங்களில் இந்தி யுக்தியை கடைபிடிக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் வாக்கு சேகரிப்பில் அடிமட்ட தொண்டர்களை உணர்வுடன் ஈடுபட வழிவகை செய்துள்ளார். இந்த திட்டம் வெள்ளோட்டமாக எதிர்வரும் நவம்பரில் தேர்தலை சந்திக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுத்தப்படுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கிராம அளவில் உள்ள தொண்டர்களிடம் ராகுல்காந்தி சுழற்சி முறையில் தொலைபேசி மூலம் பேச தொடங்கிவிட்டார். இது கட்சியினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.