செல்போனில் கருணாநிதி சிலையை போட்டோ எடுத்த ராகுல் காந்தி!

ருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, சிலையை தனது செல்போனில் போட்டோ எடுத்தார்.
தி.மு.க. முன்னாள்  தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியின் சிலையை இன்று சென்னை அண்ணா அறிவாலயலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்துவைதாத்தார். அகில இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்துகொண்டார்.
மாலை 5.20க்கு கருணாநிதி சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பொத்தானை அழுத்தி வைத்து திறந்து வைத்தார்.

இதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு அனைத்து தலைவர்களும் கிளம்பிச் சென்றனர். அப்போது மேடையிலிருந்து கீழே இறங்கிய ராகுல்காந்தி தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து கருணாநிதியின் சிலையை போட்டோ  எடுத்தார்.

பிறகு தனது தாயார் சோனியா காந்தியுடன் மெரினா சென்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கிளம்பினார்.
ராகுல் காந்தியின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பிறகு, “கருணாநிதியின் சிலை ராகுலை வெகுவாக கவர்ந்துவிட்டது. அதனால்தானஅ போட்டோ எடுத்தார்” என்று பேசிக்கொண்டனர்.