Random image

காங்கிரஸ் தொண்டர்கள் மீது சத்தீஸ்கரில் தடியடி : ராகுல் கண்டனம்

பிலாஸ்பூர்

த்தீஸ்கர் மாநில அமைச்சருக்கு எதிராக நடந்த போரட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தப் பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிலாஸ்பூரில் உள்ள சத்தீஸ்கர் மாநில அமைச்ச்ர் அமர் அகர்வாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது.    இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் மீது சத்தீஸ்கர் மாநில காவல்துறை தடியடி நிகழ்த்தியது.  இந்த நிகழ்வு மாநிலம் எங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  எதிர்க்கட்சிகள் இந்த தடியடியை கடுமையாக கண்டித்துள்ளனர்.

காவல்துறையின் இந்த தடியடியால் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.   போராட்டத்தில் கலந்துக் கொண்டதாக இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    இந்த நிகழ்வு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   அத்துடன் தடியடி சம்மந்தமான வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.

ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “தற்போதிய நரேந்திர மோடி ஆட்சியில் சர்வாதிகாரமும் ஒரு தொழிலாக மாறிஉளது.   ராமன் சிங் அரசு காங்கிரஸ் தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை எதிர்த்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.   தடியடி என்பது முழுக்க முழுக்க அரசியல் அடக்குமுறை என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என பதிந்துள்ளார்.