தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ராகுல் காந்தி கடும் கண்டனம்

டில்லி

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து ராகுல் காந்தி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   போராட்டக்காரர்கள் மீது இன்று தமிழக அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது.   இதில் ஒரு மாணவி உட்பட பலர் மரணம் அடைந்துள்ளனர்.  மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 அல்லது 10 பேர் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களின் மீது தமிழக அரசின் காவல்துறை நடத்திய துப்பாகி சூட்டில் 9 பேர் இறந்துள்ளனர்.  இது அரசின் பயங்கரவாதத்துக்கு ஒரு கொடூரமான உதாரணம் ஆகும்.   அநீதியை எதிர்த்து போரிட்ட பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.  இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த மாவீரர்களின் குடும்பத்தினரும் மற்றும் காயமடைந்தோரும் மன ஆறுதல் அடைய நான் பிரார்த்திக்கிறேன்” என பதிந்துள்ளார்.

You may have missed