தோனிக்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து

டில்லி:

37 வது பிறந்த நாளை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தனது மனைவி, குழந்தை மற்றும் சக வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தோனிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘இந்தியாவின் கூல் கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி. நல்ல உடல்நலம் மற்றும் வெற்றி வருங்காலங்களில் தொடர வாழ்த்துக்கள்’’ என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.