டில்லி:

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த 2 லோக்சபா, ஒரு சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

பாஜக ஆளும் மாநிலத்தில் எதிர்கட்சியான காங்கிரஸ் வெற்றி அக்கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியினரை ராகுல்காந்தி பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டார்.

இதை தொடர்ந்து ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கரன் சிங் யாதவ், ராகு சர்மா, விவேக் தாகத் ஆகியோரை ராகுல்காந்தி நேரடியாக சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.