சிந்தியாவுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

டில்லி

த்திய பிரதேச முதல்வராக தேர்ந்தெடுக்கப்படாததற்காக ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார்..

நடந்து முடிந்த மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அந்த மாநிலத்துக்கு முதல்வராக ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் இடையே போட்டி இருந்தது. மாநில முதல்வரை முடிவு செய்யும் பொறுப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் நேர்காணல் செய்தார். அதன் பிறகு கமல்நாத் மத்திய பிரதேச மாநில புதிய முதல்வராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டரில் லியோ டால்ஸ்டாயின் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தனது டிவிட்டரில் ”உலகின் மிகச் சிறந்த வீரர்கள் நேரமும் பொறுமையும் தான் என லியோ டால்ஸ்டாய் கூறி உள்ளார்’ என பதிவிட்டுள்ளார். அதாவது ராகுல் காந்தி தனது டிவீட் மூலம் சூசகமாக இது கமல்நாத் நேரம் எனவும் ஜோதிராதித்ய சிந்தியா இன்னும் பொறுமை காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி