டில்லி

த்தியப் பிரதேச மாநில முதல்வர் 5 சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கியதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சௌகான்.   இவரை மத்தியப் பிரதேச மாநில மக்கள் மாமா என அழைப்பார்கள்.   இம்மாநிலத்தில் நர்மதை நதியை சுத்தம் செய்வதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.     அந்த ஊழலை வெளிப்படுத்த ஒரு யாத்திரை மேற்கொள்ளப் போவதாக ஐந்து சாமியார்கள் அறிவித்திருந்தனர்.

அந்த ஐந்து சாமியார்களுக்கு இணை அமைச்சர் அந்தஸ்து வழங்கி முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் உத்தரவிட்டார்.    இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   இது கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தி மொழியில் ஒரு பதிவு இட்டுள்ளார்.

அந்தப் பதிவில். “சாமியார்கள் எங்கே செல்கிறார்கள் என்பது மாமாவுக்கு மட்டுமே தெரியும்.   மாநிலத்தில் மாமா என்பது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.  .   சாமியார்கள் நடத்த இருந்த போராட்டத்துக்காகவே அவர்களுக்கு மாநில அரசால் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.”  என கூறி உள்ளார்.