கட்சியை வலுப்படுத்த ‘பாரத் யாத்திரை’ செல்ல ராகுல் காந்தி திட்டம்

புதுடெல்லி:

பாரத் யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பாதயாத்திரை செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.


கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை சமாளிக்க பாஜக புதுப்புது யுத்திகளை கையாண்டது. பல மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டது.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக அறிவித்தது.

மக்களவை தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். எனினும் இதனை காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்க்க பாரத் யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பாதயாத்திரை செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

 

கார்ட்டூன் கேலரி